உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

154

கோள் இல் பொறி இன் குணம் இலவே எண்குணத்தான் தாளை வணங்காதலை என்று பதம்

பிரித்திருக்கிறோம்.

இனி, ஒவ்வொரு சொல்லின் உட்பொருளையும் முதலில் காண்போம். -

கோளில் பொறி என்பதற்கு கொள்கை இல்லாத பொறி என்று பரிமேலழகரும்; ஐம்புலன்களையும் இழந்த பொறிகள் என்று நாவலர் நெடுஞ்செழியனும் பொருள் கண்டிருக்கிறார்கள்.

கோள் என்பதற்கு கிரகம் என்றும், கோட்பாடு என்றும் , கொள்கை என்றும் , வலிமை என்றும் பொருள்கள் உண்டு.

இங்கே கோள் என்பதற்கு வலிமை என்றே பொருள் காண வேண்டியிருக்கிறது. பொறிகள் என்றால் இங்கே ஐம்பொறிகள் தானே இருக்கின்றன!

வலிமை இல் லாத பொறிகள் என்று பொருள் காணுகிற போது, பொறிகள் வலிமையாக இருக்க வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் உறுதிசெய்து கொள்கிறோம்.

வலிமையற்ற பொறிகள் வாழ்க்கைக்கு உதவாது போகின்றன.

பொறி என்றால், இந்திரியம் என்றும், தீப்பொறி என்றும், அடையாளம் என்றும், செல்வம் என்றும் பல பொருட்கள் உண்டு. அறிவு, புலப் பொறி என்றும்

கூறுவார்கள்.

எண்குணம் என்றால் வலிமையான குணம் என்று