உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I56 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

வெட் டினாலும், அதற்கு மரம் என்றுதான் பெயர். ஆனால், மனித உடலில் உள்ள உறுப்புக்களில் ஒன்று குறைந்தாலும், அவனை, மனிதன் என்று கூற மாட்டார்கள். அவன் எந்த உறுப்பை இழந்தானோ, அந்த உறுப்புக் கேற்ற பெயரை வைத்துத் தான், விகாரமாகக் கூறுவார்கள். - * .

கண்ணை இழந்தால் குருடன், காதை இழந்தால் செவிடன், வாயை இழந்தால் ஊமை, மூக்கை இழந்தால் மூக்கரையன், அதேபோல, மெய் யில் கையை இழந்தால் நொண்டி, காலை இழந்தால் முடவன், தலையை இழந்தால் முண்டம், உடம்பின் சுகத்தை இழந்தால் நோயாளி, உயிரை இழந்தால் பிணம்.

இந்தக் குறைகளை பிங்கல நிகண்டு விளக்கமாகப் பேசுகிறது.

‘சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்

கூனும் குறளும் ஊமையும் செவிடும் மாவும் மருளும் என்ப மக்கட்கு ஏயும் சிறப்பிலா எண்பெயர் எச்சம்’

(பிங்கலம் 430)

சிதடு என்றால் குருடு; உறுப்பில்லாமல் குழந்தை பிறக்கும் போது பிண்டம்; கூன், குள்ளத்தன்மை, ஊமை, செவிடு, மிருகத்தன்மை, உறுப்பு மயக்கம் என்று எட்டு ஊனங்கள். -

உறுப்புக்கள் இல்லாதபொழுது, அதற்குப் பெயர்கள் வேறு. பயனில் லாத எந்த பொருட் களுக்கும் பெருமை இல்லை என்பது தான் உலக இயல்பு.