வள்ளுவர் வணங்கிய கடவுள் I57
அதுபோல, இருந்தும் பயனில் லாத உறுப் புக் களுக்கு பெருமை எப்படி கிடைக்கும்? -
அதனால் தான், வலிமை இல் லாத ஐம் பொறி களின் இயல்பாக இருக்க வேண்டிய நலம் இல்லை யென்றால், அவற்றால் எதுவும் பயன் இல்லையே.
உலகக் காட்சிகளை பார்க்கிறேனே! எழுகின்ற ஒலிகளைக் கேட்கின்றேனே! வருகின்ற மணங்களை நுகர்கின்றேனே! தருகின்ற சுவையினை ரு சிக் கின்றேனே! உடம்பால் குளிரையும் வெப்பத்தையும் மட்டுமல்ல, உணர்வுப் பூர்வமானவற்றை துய்க்கின்றேனே என்று பலரும் கூறலாம்.
மேலே கூறிய எல்லா நிகழ் வுகளையும் , ஐந்தறிவுயிர்களும் செய்கின்றன. மாக்களும் மற்ற விலங் கினங்களும் தான் செய்கின்றன. அப் படி யென்றால், மனித செய் கைகள் அவற்றிற்கு மாறுபட்டனவா என்று கேட்டால், ஆமாம் என்றுதான் அர்த்தம்.
‘ஐயுணர்வு எப்தியக் கண்ணும் பயம் இன்றே
மெயப் யுணர்வு இல்லாதவர்க்கு (354)
ஐம்பொறிகளாலும் ஒருவர் எல்லாம் பெற்றாலும் கூட, உலகில் உள்ளனவற்றை ஆராய்ந்து பார்த்து, தெளிந்து, உண்மையை உணராவிட் டால், அது பயனில் லாமல் போகும் என்று வள்ளுவரே பாடி, நம்மை வழிப்படுத்துகிறார்.
கண்ணோட்டம் இருக்குமிடத்தில் அன்பும், செவி நாட்டம் இருக்குமிடத்தில் இரக்கமும், நாசி ஒட்டம் இருக்கும் இடத்தில் தூய்மையும், நாவோட்டத்தில் வாய் மையும் , மெய்யோட் டத் தில் உழைப் பின்