டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
I58
மேன் மையும் விளங்க வேண்டும் என்பது தான் மெய் ப் பண்பாட் டின் முக்கிய வேள் வியாகத் திகழ்கின்றது.
ஆக, ஒவ்வொரு பொறிக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. அந்தக் குணமாகிய பண்பென்னும் தொழில், அந்த ஐந்தும் ஆற்றல் மிக்கதாகவே இருக்க வேண்டும் என்பது இயற்கை நெறி.
அந்தப் பொறிகள் எப்பொழுது பயனற்றுப் போகின்றன என்றால் , எண் குணத்தான் தாளை வணங்காதத் தலை என்கிறபோது, என்கிறார் வள்ளுவத் தேவர்.
எண் குணத்தான் என்ற சொல்லில் எல்லோரும் தடுமாறிப் போகின்றார்கள். தங்களை மறந்து போகின்றார்கள் சிலர். இன்னும் சிலர் தங்களையே இழந்து போகின்றார்கள்.
எண் குணத்தான் என்றால் , எட் டு வகையான குணங்களை உடையான் என்கிறார் பரிமேலழகர். எண்குணம் என்றால் எளிய குணம் என்கிறார்கள் சில உரையாசிரியர்கள். எண் வகைப் பண்பு என்றும் சொல்கிறார்கள்.
இறைவனுக்குத்தான் எண் குணம் உண்டு என்று அடித்துப் பேசுகின்ற ஆன்மிகத் தார் பலருண்டு. அவர்களிலும் பலவகையினர் உண்டு. அருகனுக்குரிய எண் குணம் , சிவனுக் குரிய எண் குணம், வணிகருக்குரிய எண் குணம், மனிதருக்குரிய எண் குணம் என்று பலவகையான எண் குணத்தாரை நமக்கும் கொடுத்து விட்டுப் போயிருக்கின்றார்கள் நமது முன்னோர்கள்.