வள்ளுவர் வணங்கிய கடவுள் I59
அவற்றை யெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து
கொள்கிற போது, தேர்ந்து கொண்டு, ஒரு முடிவுக்கு வருகிற திடமான ஞானம் நமக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையுடன், ஆய்வினைத் தொடருவோம்.
1. அருகன் எண்குணம் (அருக தேவன்)
1. அனந்த சுகம் - அளவில்லாத சுகம் 2. அனந்த ஞானம் 3. அனந்த தரிசனம்
அளவில்லாத ஞானம்
அளவில்லா காட்சியர்
4. அனந்த வீரியம் அளவில்லாத வலிமை
-
5. நிர்க் கோத்திரம் - உறவின்மை 6. நிர்நாமம் - பெயரின்மை 7. நிராயுவர் யம் - வாழ்நாள் இன்மை 8. அழிவின்மை - நிலைத்திருக்கும் தன்மை
அருகதேவனுக்கு மட்டுமே, இத்தகைய எண் குணங்கள் உள்ளன. ஆகவே, அவரின் தாள்களை வணங் காத தலை என்ன தலை என்று அர்த்தம் கூறியவர்கள் பலர்.
2. சிவனுக்குரிய எண்குணம் (சைவாகமக் கருத்து)
. தன் வயத்தனாதல்
துய உடம்பினனாதல் . இயற்கை உணர்வினனாதல் . முற்றும் உணர்தல் . இல்பாகவே பாசங்களில் நீங்குதல் . பொருளுடமை . முடிவிலா ஆற்றலுடமை வரம்பில் இன்பமுடமை