உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

முடியாமல் போகின்றது.

இப்படி எண்குணங்கள் ஏராளமாக இருக்கின்றன. பிறப் பின்மை, இறப் பின்மை, ஆசையின்மை, பெயரின்மை, உவமையின்மை, ஒரு வினையின்மை, நிறைவுடைமை, கோத்திரமின்மை என்பனவற்றை, கடவுளுக்குரியதாகக் கூறிவிடுகின்றார்கள்.

மனிதர்களிடையே பிறந்து வளர்ந்து, துறவறம் மேற் கொண்டு, அறவறத்தால் மகிமைப் பெற்று, மேலும் ஒன்றிப் போய் , அகத்தவத்தால் , எண் வகையோகத்தால், எண் வகைப் பேறுகள் பெற்று விளங்கும் குருவானவர் தான் எண்குணத்தான் என்று இங்கே நாம் முடிவாகக் கொள்ளலாம்.

நம் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணை, யோகம் ஞானம் இவைகளால் திறக்க வேண்டும். இப்படித் திறக்கப் பெற்றுக் கொண்டவனுக்கு, உலகின் எல்லா அனுபவங்களும் பட்டப் பகல் போல் தெரியும். அவன்தான் சுத்த ஞானி. மோனகுரு என்று நாம் கூறலாம்.

இத்தகைய அரிய சக்தியும் ஞானமும், மோனமும் கைவரப் பெற்றவரின் தாளை வணங்காத்தலையால் என்ன பயன் உண்டு?

இங்கே வணங் குதல் என்ற சொல், மிகவும் பொருள் பொதிந்து விளங்குவதாகும்.

வணங் குதல் என்ற சொல்லுக்கு காணல், காண்டல், கை கூப்பல், தெண்டனிடுதல், தொழுதல், பணிதல், பரவுதல், பார்த்தல் போற்றல், வந்தித்தல், வழிபடல்.