பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் I63

ஆக, ஐம் புலன்களும், ஒத்த உணர்வோடு செய்வதுதான் வணங் குதல் என்பதாகும். இங்கே தலை வணங்குதல் என்று வள்ளுவர் குறித்திருக்கிறார் ஐம்பொறிகள் பற்றி, முதல் வரியில் குறித்த வள்ளுவர், இரண்டாவது அடியில் ஏன் தலை என்று கூறவேண்டும்?

தலை என்றால் தலைமை, பெருமை, முதல் , சிரம், அதிகாரம் என்ற பல பொருள்கள் உண்டு.

எண் சாண் உடம் பிற்கு சிரசே பிரதானம் என் பார்கள். தலை என்பது, உடலுக்கே தலைமை இடத்தை வகிப்பதாகும்.

ஒரு வரை, பார்க் கும் போது, அடி முதல் முடிவரை என்பார்கள் பாதாதிகேசம் என்பார்கள்.

தலைக்கு அதிகாரம் என்று ஒர் அர்த்தம் உண்டு. தலைக்கு அப்படி ஒரு அதிகாரம் எப்படி கிடைக்கும் ?

கழுத்துக்கு மேலே உள்ள பகுதியைத் தலைப் பகுதி என்பர். தலை என்னும் அந்த பிரதான உறுப்பை, மூன்று பகுதிகளாக அறிவியலார் விளக்கிக் கூறுவார்கள்.

1. உடம் பின் உச்சமான உயர்ந்த பகுதி. முகத்தையும் மண்டை ஒட்டு மேற் பகுதியையும் கொண்டு விளங்குவதுடன், மூளை எனும் பிரதான, முக்கியமான உறுப்பையும் கொண்டிருக்கிறது. முகத்திலே பார்க்க, கேட்க, சுவைக்க, நுகர போன்ற சிறப்புப் புலன்களும் இருக்கின்றன.

2. முண்டத்தையும் தலையையும் இணைக் கும் முதுகெலும்பு இணையப்பெற்றுள்ளது.