உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் I65

தாளை வணங் குவது என்றால், திருவடியை எனலாம். திருவடி என்பது ஞானத்தைக் குறிக்கிறது.

அறிவு, ஆலோசனை, அருள், இரக்கம், கருணை, ஞானப் பெருக்குடன், எளிமையும், மதிப்பும் , வலிமையும் நற் செய் கைகளும், கொண்டு, நல்ல வழிகாட்டி ஒளியூட்டி, நிறைந்த நீண்டப் புகழ் மிகுந்த வாழ்க்கையை வழங்குகின்ற எண்ணிலா பண்புகளைக் கொண்ட மோன குருவின் ஞானத்தை ஏற்று, வணங்காத தலை என்ன பயத்தது? -

கோளில் பொறி என்றதனால், வெளிப்புற சிறப்பு புலன்களையும், தலை என்றதனால், உட்புற அகத்து நிகழ்வுகளையும் குறித்துக் காட்டுகின்ற வியப்பு மிகு உட் பொருளை, இங்கே நாம் அறிந்து இன்புறுகின்றோம்.

பொறிகள் குருவின் ஞானத்தை ஏற்று மகிழும் போது, தலையானது,தாழ்ந்து வணங்கி, தேகத்தின் பாங்கினை வெளிப்படுத்திக் காட்டுகின்றது.

இப்போது நாம் இந்தக் குறளுக்குரிய கருத்துரையைக் காண்போம்.

வலிமையில்லாத ஐம் பொறிகள், அவற்றிற்கான இயல்பான தன்மைகளை இழந்து போகின்றன. இருந்தும் இல் லாத நிலையை அடைகின்றன. அதுபோலவே, ஐம்பொறிகளை ஆட்டிப் படைக்கின்ற தலையும் உள்ளது. மிகச் சிறப்புமிக்க ஞானமும் அரிய செயல்களாற்றும் ஆற்றலைக் கொண்ட குருவானவர் மேற் கொள்கின்ற முயற்சிகளை, மனமார ஏற்றுக் கொண்டு, அவரது ஞானத்தை தலைதாழ்த்தி வணங்க வேண்டும்.

அவ்வாறு வணங்காத தலையும், அதன் மதிப்பை,