I66 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
சிறப் பை, தலைமைத் தன்மையை இழந்து போகின்றது. அகத்தாலும், குருவைப் போற்றி, ஏற்று, பணிந்து, பண்போடு அவரைப் பின்பற்ற வேண்டும் என்பதை, வலியுறுத்துவதுடன், மிகவும் அரியதான மெய்ஞானத்தையும் நினைவு படுத்துகிறார் வள்ளுவர்.
எட்டாவது குறளில், தெளிவான ஞானம் மட்டும் போதாது வாழ்க்கைக் கடலை நீந்த, வலிமையான உடலும் இருந்தால் தான், வெற்றிகரமாக கடக்க முடியும் என்ற மெய் ஞானத்தை வெளிப் படுத் திக் காட்டினார்.
ஒன்பதாவது குறளில், வலிமையான உடலில் தான், வலிமையும் நுண்மையும் திண்மையும் நிறைந்த ஐம் புலன்கள் வெற்றிகரமாகச் செயல்படும். அந்தச் செயல்பாடுகளுக்கு, தலையின் உள்ளே மூளைதான் ஏற்றமுறும் காரணமாக இருக்கிறது.
வலிமையான உடலில்தான் வலிமையான மூளை இருக்கும். வலிமையான மனமும் இருக்கும்.
வலிமையில் லாத ஐம் புலன்களால் வாழ் வு சுகப்படாது. வாழ் வளித்து வழிகாட்டும் குருவை வணங் காத தலையால் , வாழ் வும் நெறிப் படாது, . நலம் பெறாது. புகழ் பெறாது.
ஆகவே, புலன்களின் சக்திகளைப் பெருக்குவதுடன், அடக்கி வாழவும் , அவற்றால் பெறுகின்ற பயன்களை, முழுதும் துய்க்கவும் ஞான குருவின் வழியாக ஊக்கம் பெறுங்கள் என்பதைக் குறிக்கவே, எண் குணத் தான் தாளை வணங் காத் தலையானது, வலிமை இல் லாத ஐம் பொறிகள், இனிய பயன்களைத் தராது என்று, மருள் மண்டிக் கிடக்கும் அறிவை, அதனின்றும் வெளிக் கொணர்ந்து, விழிப்புணர்வை ஊட்டுகின்றார் வள்ளுவர்.