பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 167

13. ஆழியும் கடலும்

‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடி சேரா தார் (10)

இறைவன் e3"|Lo- சேர்ந்தார், பிறவிப் பெருங் கடல் நீந்துவர்; சேராதார் நீந்தார் என்று பரிமேலழகர் குறளைப் பிரித்துப் பகுத்து பொருள் கூறுகின்றார்.

இறைவன் அடியென்னும் புணையைச் சேர்ந்தார், பிறவியாகிய பெருங் கடலை நீந்துவர். அதனைச் சேராதார், நீந்த மாட்டாராய், அதனுள் அழுந்துவர் என்று விளக்கம் தருகின்றார்.

இறைவன் அடி சேராதார் பிறவிப் பெருங்கடல் நீந்தார். சேர்ந்தார் நீந்துவர் என்று பிரித்துக் கூறி, நாவலர் பொருள் தருகிறார் பின் வருமாறு.

அறிவாற்றலிற் சிறந்த சான்றோராகிய ஒரு பெருந் தலைவரைப் பின்பற்றி நடக்காதவர்கள், வாழ்க்கை எனும் பெருங் கடலைக் கடக்க