பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் I5

உள்ளம் உருக்க, வள்ளுவர் பாடினார். அந்தணர்கள் பாட மறுத்த, பாடாமல் மறைத்த வேதக் கருத்துக் களையெல்லாம் உலக வெளிச்சத்திற் குக் கொண்டு வந்தார், வித்தகர் வள்ளுவர்.

அக்கால அந்தணரின் இந்த அடாத செயலுக்கு தன் எதிர்ப்பைக் காட்ட, அவர்களின் அறிவு குறுகிய மனப்பான்மையை வெளிப்படுத்திற் காட்ட, சமுதாய நோக் கற்ற சண்டாளர்கள் என்பதை தோலுரித்துக் காட் ட, வள்ளுவர், மிக மென்மையாகவே பாடி, அந்தணர் யார் என்பதை விளக்கிக் காட்டினார்.

‘அந்தணர் என்போர் அறவோர் மற் றெள் வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான் (30)

அந்தணர் என்றால் அந்தத் தையும் (அதாவது முடிவையும், உணர்ந்தவர், வேதாந்தத்தில் விழுமிய ஞானத்தையும் பெற்றவர், அறவோர், பார்ப் போர் ஐயர், ஆய்ந்தோர், உயர்ந் தோர் என்றெல்லாம் இச்சொல்லுக்குப் பொருள் உண்டு.

அறவோர் என்றால் , விருப்பு வெறுப் பின்றி, எதிலும் ஈடுபாடில்லாமல், சகலரையும் சரிசமமாகப் பார்க் கின்ற, பாவிக்கின்ற பண்பாளர்கள். ஆமாம் பற்றற்ற துறவிகள் என்று அர்த்தம்.

அதனால் தான் அந்தணரை அறவோர் என்றார். அந்தணர்க்கு இருக்க வேண்டிய அருமையான பண்பு செந்தண்மை என்றார்.

செந் தண்மை என்றால் , செம்மை மிகுந்த எளிமை, குளிர்ச்சி, சாந்தம் , மென்மை, கருணை என்றெல்லாம் பொருள் உண்டு.