I7O டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
மைல்கள் அளவு நீளம் இருக்கும். தென் அமெரிக் காவின் கீழ் க் கரையோரத்தில் உள்ள ரயோடிலா பிளடா முகத்துவார சமுத்திரத்தின் ஆழம் 8 மைல் என்பர்.
பிலிப்பைன் தீவுக்கு வடக்கில் உள்ள கடலின் ஆழம் 18 மைல் என்று கூறுவார்கள்.
இப்படி ஆழமுள்ள ஆழியில் நீந்துதல் அரிது என்று குறிப் பிட் டிருக்கின்றார் என்பதற்காக, பூமி இயல் தொடர்பான விளக்கத்தையும் பார்க்கும்போது, வள்ளுவரின் புவி இயல் ஞானம் நமக்குப் பளிச்செனத் தென்படுகிறது.
கடலில் சுமார் 1000 அடிகளுக்குக் கீழே இருளே சூழ்ந்திருக்கிறதாம். ஒளியென்பதே அங்கு இல்லை. பிறகு வேறென்ன அங்கு இடம் பெற்றிருக்கிறது?
ஆழ் கடலின் அடிப்பாகம் பூமியைப் போலவே, குன்றுகள், சமவெளிகள், பள்ளத் தாக்குகள், எரிமலைகள், மரங்கள், செடிகள், பூண்டுகள் மற்றும் இரத்தின வகைகள், உலோக வகைகள் முதலியவற்றை வைத்துக் கொண்டிருக்கிறது.
சில கடல் களுக்குள்ளே ஆறுகளைப் போல, நீரோட் டம் ஒடிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக, ஆழிகளில் நீர்ச்சுழிகள் தோன்றுகின்றன.
அந்த ஆறு போன்ற நீரோட் டங்களும், நீர்ச் சுழிகளும் ஒன்று சேருகிறபோது, கப் பல்கள் போனாலும் கவிழ்ந்து போகின்றன, தாக் குண்டு நாசமடைகின்றன.