வள்ளுவர் வணங்கிய கடவுள் I71
இப் படி கப்பலும் கலங்களும் ஆழியில் கடக்க முடியாமல் அழிகிற போது, மனிதன் நீந்துவது எம்மாத்திரம்?
வாழ்க் கையில் மனிதனுக்கு மூன்று வகையில் துன்பங்கள் நேரிடுகின்றன. 1. இயற் கையினால் ஏற்படும் துன்பங்கள், அழிவுகள். 2. சுற்றப் புறத்தில் வாழும் கொடிய மிருகங்கள், விடத்தன்மையுள்ள உயிரினங்கள், மற்றும் துண் கிருமிகளால் உண்டாகும் ஆபத்துக்கள், 3. தேகத்தில் உண்டாகும் கடுமையான நோய்கள், நபிைவுகள்.
ஒவ்வொன்றின் ஆற்றலும் அளக்க முடியாத ஆழம் கொண்டவை. ஆச்சரியத்தையும் அச்சத்தையும் உண்டு பண்ணி, பிரமிக்க வைத்து, பேரழிவைத்தரும் நச்சுத்தனங்கள் நிறைந்தவை. -
இதனால்தான், பிற ஆழி என்று ஒரு சொல்லை இட்டார். இதை உலக இச்சைகளை அறவே அறுத்த அந்தணன்தான், நீந்துவதற்கேற்ற ஞானத்தையும், ஞானத் தின் வழியாக பெரும் வலிமையுைம் வல்லமையும் புகட்ட முடியும் என்றார்.
இந்தக் குறளில் வள்ளுவர், ஆழி என்று கூறாமல், பெரும் கடல் என்று வேறொரு சொல்லைப் போட்டிருக்கிறார்.
அப் படியென்றால், ஆழிக்கும் கடலுக்கும் அடிப்படை வித்தியாசங்கள் இருக்க வேண்டுமென்று எண்ணுகிற நினைவை உண்டு பண்ணுகிறதல்லவா!
கடல் என்பது உலகைச் சூழ்ந்த நீர்ப் பரப்பு.