உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 173

ஆனால் வள்ளுவர் ஏன் வாழ்க் கையை கடல் என்றார்?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, நாகரிகம் அடைந்த மக்கள் வாழ்வை நடத்தத் தேர்ந்தெடுத்துக் கொண்ட இடம், ஆற்றங்கரைப் பகுதி, கடலோரப் பகுதி என்று அறிஞர்கள் கூறுவார்கள்.

ஒருவர் உயிர்வாழ இரண்டு திறன்கள் அவசியம்.

ஒன்று நிலத்தில் வருகின்ற ஆபத்துக் களைத் தடுத்துக் கொள்ள சிலம்பப் பயிற்சி.

நீரில் ஏற்படுகின்ற விபத்திலிருந்து காத்துக் கொள்ள நீச்சல் பயிற்சி.

இந்த இரண்டு பயிற்சிகளும், மனிதர்களுக்கு வலிமையான தேகத்தையும் , வலிமையான மனதையும் வளர்த்து விடுவனவாகும் என்பார்கள்.

எட் டாவது குறளில் , ஆழியை, அந்தணரின் ஞானமில்லாவிடில் நீந்த முடியாது என்றார். ஞானம் மட்டும் போதாது வலிமையும் வேண்டும் என்று குறித்தது போல, இந்தக் குறளிலும் , பிறவிப் பெருங்கடல் நீந்துவர் என்றார்.

நீந்த முடியும் நீந்திக் கரை சேரமுடியும் என்ற நம் பிக் கையை நீந்துவர் என்றே உறுதியாகக் கூறுகின்றார்.

நீந்தும் பயிற் சி என்றதும் , நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய இன்னொரு கருத்தும் இங்கே வருகிறது.