உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

I74

தண் ணிர் என்றவுடனே, நீச்சல் தெரியாத வர்களுக்கு, தானாகவே பயம் வந்து விடும். அதைக் கண்டு அலறி ஓடுபவர்கள், அச்சப் பட்டுக் கொண்டு விலகிச் செல்பவர்கள் தாம் மனிதர்கள்.

தண்ணிரில் நீச்சல் கற்றுக் கொள்ள ஆசைப் படுபவர்கள், தன்னிச்சையாக, தண்ணிரில் தைரியமாக இறங்கி விடமுடியாது.

துணையாக, அந்தச் செயலை அருகிலிருந்து கற்றுத் தருபவராக ஒருவர் வேண்டும்.

அப்படித் துணையாக இருந்து பழக்கி விடுபவரை பழக்குநர் (Trainer) என்று கூறுவார்கள். இவர் ஆரம்ப நிலையில், இந்த நீச்சல் பழக்கத்தைக் கற்றுத் தருபவர்.

இன்னும் நுண்மையுடன், தேர்ச்சி பெற்ற நீச்சல் காரராக உருவாக்க உதவுபவரை, பயிற்றுநர் (Coach) என்பார்கள்.

இதற்கும் மேலே தன்னை தயார் செய்து கொள்கின்ற பக்குவம் பெற்று பயிற்சி செய்பவர்களே, வெற்றிகரமான நீச்சல் காரர்கள் என்று புகழப் படுவார்கள்.

பிறவிப் பெருங்கடல் என்றவுடன், முற் பிறப்பு, இப்பிறப்பு, வரப்போகிற ஏழு பிறப்பு என்றெல்லாம், கற்பனைகளை மதமாக்கி, இயல்பான நம் பிக்கை களையும் மூடி, முடமாக்கி விட்டவர்கள் அதிகம்.

இந்தப் பிறவியையே என்ன வென்று புரிந்து கொள்ளாத மக்கள் தான், நிறைய பேர்கள் இருக்கின்றார்கள்.