I6 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
சமுதாய மக்களின் மேல் அவர்களுக்கு, என்றும் கருணை இருந்து, அவர்களை நல் வழிப் படுத் தி, நலமாக வாழச் செய்து, நாளும் வழி நடத்துவதாக வாழ்வாரே அறவோர் என்றார்.
எப்பொழுதும் பிறர் நலன்களை, சுகங்களை சிறிதும் பிறழ்ந்து போகாமல் பார்த்துப் பார்த்துப் பண்புடன் பணியாற்றுபவர்களையே பார்ப்பார் என்று கூறுவார். அதுதான் பிறகு பார்ப்பார் என்று ஆயிற்று.
பார்ப் பார், ஐயர் மற்றும் அந்தணர் என்ற இந்தச் சொல்லுக்கு அர்த்தம் உண்டு என்பது நமக்குத் தெரியும்.
பார்ப் பானை ஐயரென்ற காலமும் போச்சே.” என்று பாரதியார் பாடினார். ஏன் அப்படிப் பாடினார், எதற்குப் பாடினார் என்று, இங்கே விளக்கப் போவதில்லை.
அவர் கூறிய வரிகளுக்கு ஒரு சிறு அர்த்தத் தை மட்டும் பார்ப்போம். பார்ப்பான், ஐயன் என்று இரு சொற் களிடையே, அவை சாதியைக் குறிக் கும் சொல் லாக இப் போது மாறிப் போனது நமக் குத் தெரியும்.
பார்ப்பார் என்பவர், முக்காலத்தையும் பார்ப்பார் என்பதாக இருந்தவர். அத்தகைய அரிய சமுதாயப் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்ததால், அவர்களை ஐயர் என்றனர். ஐ +அர் என்று இந்தச் சொல் பிரிகிறது. -
ஐ என்றால் உயர்ந்த என்று அர்த்தம். ஐயர் என்றால் உயர்ந்தவர். உலக மக்களுக்கும் மேலான