178 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
நினைத்தல், உருகுதல் என்ற பொருள் உண்டு.
இறைவனது ஞானத்தை, இடைவிடாது நினைத்து, அல்லும் பகலும் அந்த நினைவுகளிலே திளைத்து, உள்ளம் உருகி, உள்ளொளி பெருக்கி, அதன் வழி ஒழுகுவதையே சேர்தல் என்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஞானத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறவரே, ஞானவழி செல்கின்றவரே, பிறவி என்கிற பெருங்கடலை, களைப் பில்லாமல், இளைப்பில்லாமல், கவர்ந்து கொல்கின்ற கவலைகள் இல்லாமல், நீந்திக் கரைசேர முடியும்.
நீந்திக் கரை சேரமுடியும் என்பது கடினம் என்பது எல்லோருக்கும் தெரியும். வள்ளுவருக்கும் தெரியும்.
நிலவுலகில் நீடு புகழ் பெற்று, நிலைத்து வாழ்வதே பிறவி எடுத்த பேறு என்பார்கள்.
எல்லா மக்களாலும் நீந் தவே முடியாது என்பதானது, எல்லா மக்களாலும் புகழும் பெருமையும் பெற்றிட முடியாது என்பதாகும்.
புகழும் பெருமையும் பெறுவதற்கு, வளமான உடல், வலிமையான மனம் வேண்டும் என்பார்கள்.
உடல் என்பதற்கு பொன், பொருள் என்று அர்த்தம் உண்டு. உடலுக்குப் பொன் என்று கூறியதன் உட்பெருளே வேறு. பொன்னானது தீயிலே பழுக்கப் பழுக்க, அது நகைகளாக பிறப்பெடுக்க முடிகிறது. பிறருக்கும் பயன்பட முடிகிறது. - -
அதுபோலவே, உடலானது கடமையைக் காக்க முயற்சிக்கும் கடுமையான உழைப்பிலே, உழைக்க