உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 183

தெய்வப் புலவர் திருவள்ளுவர் என்று, எல்லா தமிழ் ப் பெரியவர்களும், மனமார ஏற்றிப் போற்றி புகழ்ந்திருக்கின்றார்களே!

மருந்துக்குக் கூட, மறுத்து யாரும் பேசவில்லை. வெறுத்துப் பாடவில்லை. விதண்டா வாதமாக எழுதவில்லை.

மதித்துப் பாடி யிருக்கின்றார்கள். மனம் உருகித் துதித்துப் பாடி யிருக்கின்றார்கள். காரணம், அப்படிப் பட்ட அருமையான வாழ்க்கையை வள்ளுவர் வாழ்ந்து காட்டி யிருக்கிறார் என்பதால்தான்.

அன்பால், பண்பால் , அறத்தால் , திறத்தால் , தரத்தால், தகைமை சான்ற, தமிழ் வாழ்வு ஒன்றை வாழ்ந்து வழிகாட்டியதை, நேரில் பார்த்தும்; பார்த்தவர்கள் வாயிலாகப், பாடியவர்கள் மூலமாகக் கேட்டுத் தெரிந்தும் கொண்ட, எல்லோருமே வள்ளுவரை தெய்வப் புலவர் என்றே வாயார வாழ்த்தி இருக்கின்றார்கள். இன்றும் வாழ்த்துகின்றார்கள். நாளையும் வாழ்த்துவார்கள்.

அத்தகைய ஆன்ற தமிழ் மக்கள் குல திலகமான வள்ளுவர் அவர்கள், தெய்வத்தை, தனக் காகத் தேடவில்லை. தேடவேயில்லை. தன்னைப் போல, இன்னொரு தெய்வப் புலவர், தெய்வமனிதர்கள் கிடைப்பார்களா என்றுதான் தேடினார்.

தன்னைப் போல் பிறரை நேசி என்பார்கள்.

தனது தெய்வத் தன்மை போலவே, எல்லோருக்கும் இருக்கும் என்று நினைத்தார். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று பிறரையும் நினைத்தார். அப்படியே நம்பினார்.