உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது, கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர், 31 ஆண்டுகளுக்கு முன்பாக, வள்ளுவர் தோன்றினார் என்பதே அந்த ஆய்வு முடிவாகும்.

இண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னதாக வாழ்ந்த மக்கள், உலகெங் கிலும் வாழ்ந்த மக்கள், சூரியனையே கடவுளாக, தெய்வமாக வணங் கி வந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது. o சூரிய மதம் தான் எங்கும் நிலவி இருந்தது என்பதாக, வரலாற்றறிஞர்கள் விரித்துரைக்கின்றனர்.

சூரியனை பகவானாக, கடவுளாகத் துதித்து வழிபட்டார்கள் என்பதால், இதற்கும் மேலே பல பிரச்சினைகள், அதாவது பல வாக்கு வாதங்கள் ஏற்பட ஏதுவாகி இருக்கின்றன.

சூரிய வணக்கம் என்று நான் சொன்னவுடனே, என்னை நாத் திகன் என்றும் , ஆத்திகர்கள் மனம் புண்படச் செய்வதற்கு நான் முயற்சிக்கிறேன் என்றும்,

பலர் நினைக்கலாம்.

நான் இங்கே நல்ல ஆத்திகனா? நாத்தழும்பேற வாதிக்கும் நாத்திகனா என்ற விவாதத்திற்குள் நுழைய விரும்பவில்லை.

எது நாடு, எவர் மக்கள், எது வீரம், எது கொடை, எது செல்வம், எது காதல், எது கற்பு, எது இழிவு, எது உயர்வு, எது அறம், எது திறம் என்று தெளிவாக மக்களுக்குச் சொல்ல வந்ததுதான் திருக்குறள் என்பதில், எந்த உரையாசியர்களுக் கிடையேயும் எண்ண பேதமில்லை.