வள்ளுவர் வணங்கிய கடவுள் I87
- எப்படி எழுதினார் என்பதிலும் கருத்து வேற்றுமை இல்லை. --
உரையெழுதியவர்கள் எல்லோரும் ஒருகாலத்தில் வாழ்ந்தவர்கள் அல்லர். இருபது நூற்றாண்டுகளுக்கு, முன் தோன்றிய குறளுக்கு, 12 ம் நூற்றாண்டில் வாழ்ந்த பரிமேலழகர் உரை எழுதினார் என்பார்கள். கி. பி. 13ம்நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் கூறுவர்.
இன்றைய இருபதாம் நூற்றாண்டிலும், நூற்றுக் கணக்கான தமிழ் அறிஞர்கள், திருக்குறள் தெளிவுரை, புது வுெரை, பதவ, ரை, பொழிவுரை என்று உரையெழுதினார்கள். எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏறத்தாழ எல்லா ஆசிரியர்களும், பரிமேலழகரைப் பின்பற்றியே எழுதிச் சென்றிருக் கின்றனர் என்பதையே நம்மால் உணர முடிகிறது.
இத்தகைய ஆய்வுகளுக்குள் நுழைந்து, எந்த உரை சிறந்தது ? எந்த உரை எதிர்ப்புக் குரியது ? மறுப்புக்குரியது என்பன போன்ற முயற்சிகளிலும், நான் முனைப்புக் காட்ட வில்லை.
பின் எப்படி நீங்கள், சூரிய வணக்கம் என்று சொல் கின்றீர்கள் என்று உங்களிடம் எழுகிற வினாவுக்கு, ஐயத்திற்கு விடையளிக்க வேண்டுவது எனது தலையாய கடமையாகும். - -
மனிதன் மனிதனாக வாழ வேண்டும். இதைத் தான் தெய்வப் புலவர் தெளிவாகக் கூறி, வலிவாக வற்புறுத்தினார். -
மனிதத் தன்மையினை உணருகின்ற ஆற்றலே, ஒரு மனிதனுக் குத் தேவை என்பதை, துல்லியமாக