பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 189

2. அநித சக்தி

3. புனித சக்தி

4. பரம சக்தி

1. மனித சக்தி:

மனிதனாக மன்பதையில் தோன்றிய ஒவ்வொருவருக்கும், அடிப்படையாக ஒரு சக்தி இருக்கிறது.

அந்த சக்தியை அறிவு என்றும், திறமை என்றும் கூறலாம். அறிவை, படிப்பறிவு என்பர். பட்டறிவு என்பர். அதையே உண்மை அறிவு என்றும் உபாய அறிவு என்றும் நயம்படக் கூறுவர்.

மனிதன் என்ற சொல் லின் விளக்கமே நமக்கு வியப்பூட்டுகிறது. மன் என்ற சொல் சிந்திப்பவன் என்றும், நிலைத் திருப்பவன் என்றும் மதன் என்ற சொல் , அழகுடையவன், வலிமையுடையவன், வளமை உடையவன் என்றும், அவ்வாறே நிதமும் வாழ் பவன் என்ற பொருளில் மனித சக்தி விளங்குகிறது. இத்தகைய மனித சக்தி கொண்ட மானிடர்களைப் பார்த்துத் தான், மேன்மையாக்கும் வழிமுறைகளை வகுத்துக் காட்டுகிறார் வள்ளுவர்.

2. அநித சக்தி:

அநித சக்திக்கு அளவில் லாத சக்தி என்பது பொருள். மனித சக்தியை முறைப்படி, நெறிப்படி, முனைப்போடு தொடர்கின்ற உழைப்போடு பயில்கிற போது, அது அளவில் லாத சக்தியாகி பெருகி விடுகிறது.