உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

அந்த ஆற்றல் மிகு அளவில் லாத சக்தியை வளர்த்துக் கொண்ட வல்லவர்களைத்தான், நாம் குரு என்கிறோம். ஞான குரு என்கிறோம். மோன குரு என்கிறோம். கடவுள் என்கிறோம்.

அநித சக்தியை வளர்த்துக் கொண்ட, தங்களுக் குள்ளே விளைத்துக் கொண்ட அளவில்லாத மனித சக்தியாளர்கள் தாம் , இன்றைக்கு நமக் குத் தெய்வங்களாக, வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களது பிறப்பு பற்றி, ஆயிரமாயிரம் கதைகளைக் கூறினாலும், அவர்கள் எல்லோருமே, ஒரு தாய்க்கு மகனாகப் பிறந்து, மக்களோடு மக்களாக வாழ்ந்து, மனிதர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஊட்டி, அக எழுச்சியை ஏற்றி, மேலோங் கிட வைத்த வித் தகர்களாவே வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

அவர்களில் சில தெய்வங்களின் பெயர்களைக் கூறுகிறபோது கோபப் படாமல் , நிதர்சனமான உண்மையை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஆசிய கண்டத்தில் வாழ் கிற மக்களுக்குத்தான் இறையுணர்வு அதிகம். மத உணர்வு அதிகம். ஆன்மீக உணர்வு அதிகம். எதையும் ஏற்றுக் கொண்டு, நம்பிக்கையில் நனைந்து, தம்மையே இழந்து ஒன்றிப் போவதும், ஒடுங்கிப் போவதும் அவர்கள் தாம்.

அதிகமான மதங்கள் ஆசியக் கண்டத்திலேதான் தோன்றி இருக்கிறது என்கிற உண்மை, நம்மை விய்ப்பில் ஆழ்த்தாது. அந்த மத நம்பிக்கை தான், நமக்கு வாழ்வாகிப் போய் விட்டதே!