உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் I9I

இந்து மதம் , சைவ மதம் , வைணவ மதம் , சன்மார்க்க மதம், புத்தமதம், சமண மதம், பார்சி மதம், இஸ் லாமிய மதம் கிறித்துவ மதம் போன்ற பல மதங்கள், ஆசியக் கண்டத்தில் தான் அவதாரம் எடுத்திருக்கின்றன.

மதங்களைத் தோற்றுவித்த மகான்கள் எல்லாம், மனிதப் பிறவி கொண்டு, மக்களோடு மக்களாக வாழ்ந்து, மனிதர்களை வழி நடத்தி, மரணமடைந்து விட்டவர்கள் என்பதை மட்டுமே இங்கு குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

மதங்களைப் பிறப்பித்த மகான்கள் எல்லோரும், மனித சக்தியை புனித சக்தியாக மதித்து, துதித்து, தங்களுக்குள்ளே அநித சக்தியை வளர்த்துக் கொண்டவர்கள் தாம்.

3. புனித சக்தி:

புனித சக்திக்கு, இயற்கையின் ஐம்பூதங்கள் தாம் சான்றாகத் திகழ்கின்றன. சூரியன், காற்று, தண்ணிர், நெருப்பு போன்ற சக்திகள் எல் லாம், எல்லா மனிதர்களுக்கும் பொதுவாக இருந்து, தேவைகளுக்கு உதவும் சேவைகளை செய்து வருவதால், அவற்றை புனித சக்தி என்கிறோம்.

இத்தகைய சக்திதான், மக்களிடம் இருக்கின்ற மனித சக்தியை வளர்க்கவும் , அதனுள்ளே அநித சக்தியை அதிகப் படுத்தவும், அணுவாக இருந்தும், அகலாது திரிந்தும் , உடன் வந்து மறைந்தும் , நிறைந்தும் உதவிக் கொண்டு வருகின்றன.

இப்படிப்பட்ட புனித சக்திகளுக்குள்ளே பெரும் சக்தியாகவும், அரும் சக்தியாகவும் விளங்குவது