பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I92 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

பகவன் என்கிற சூரியன் தான்.

பகவன் என்ற பதத்திற்கு குரு என்றும், சூரியன் என்றும், கடவுள் என்றும் பொருள் உண்டு.

கடவுள் என்றாலும் பகவன், குரு, தெய்வம் என்றும் அர்த்தங்கள் உண்டு.

ஆகவே, கடவுள் வாழ்த்து என்றாலும் , குருவணக்கம் என்றாலும், தெய்வத் துதி என்றாலும், அவையெல்லாம் சூரிய வணக்கம் என்பதைத் தான், இங்கே சுட்டிக் காட்டுகின்றன.

சூரிய வணக்கம் என்று இங்கே நாம் சுற் றிக் சுற்றிச் சொல்வதற்கும், சுட்டிச் சுட்டி எழுதுவதற்கும், அடிப் படைக் காரணம் , சூரியனின் சுடர் மிகு

ஆற்றல்களால்தான்.

பகவன் என்பதை பகவு + அன் என்று பிரிப்பார்கள். பகவு என்பதற்கு பிரிவு என்று பொருள் கூறுவார்கள். பகவனான சூரியனை பிரிப்பவன்

என்றால், அது பிழையல்ல. பொருத்தமே.

பகவனான சூரியன் வந்த பிறகு தான், உலகத்தில் பகல் என்றும் இரவு என்றும் இரண்டு நிலை வந்தது.

சூரியன் தோன்றிய பிறகுதான், வெப்பம் என்றும் குளிர் என்றும், இரண்டு நிலை உருவானது.

சூரியன் தோன்றிய பிறகு, மனித உயிர்களுக்கும், தாவர இனங்களுக்கும் எழுச்சி தோன்றியது. தாவரங்கள் வளர, அவை ‘ஸ் டார்ச்சு என்ற சத்துநிலையைத் தயாரித்துக் கொண்டுதான் தழைத் தோங்கின.