உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

இதனால் இரத்தம் செழுமையடைகிறது. செழுமையான இரத்தம் உயிர்க்காற்றின் வேகத்தால், உடல் முழுதும் உள்ள அனைத்து செல்களுக்கும் போய் ச் சேர்வதால், உடல் நலமாக வாழ் கிறது. வலிமையுடன் செயல் படுகிறது. திறமாக நடைபோடுகிறது.

இவ்வாறு, சூரியன் வந்த பிறகுதான், பூமியில் தாவர இனம் செழித்தது போல, மானிட இனமும் மலர்ச்சியும் எழுச்சியும் பெற்றது.

இப் படியெல்லாம் மனித குலத்திற்கு உதவியதால் தான், உலக மக்கள் எல்லாம் சூரிய வணக்கம் செய்தனர். சூரிய மதத்தை உண்டாக்கினர். சூரிய வழிபாடே எங்கும் நிறைந்திருந்தது.

இப்போது நாம் , ஒரு தெளிவான முடிவுக்கு வருவோம்.

1. கண்ணுக் குத் தெரியாத சக்தி ஒன்று இருந்து கொண்டு, உலகை இயக்கி வருகிறது. கண்ணுக்குத் தெரியாத சக்தி என்று நம்புவதை ஆத்திகம் என்கின்றனர். மறுப்பதை நாத்திகம் என்கின்றனர். நம்புவதும் மறப்பதும் அவரவர் உரிமையாகும்.

- ஆனால், பஞ்ச பூதங்களை நாம் ஆராய்ந்து பார்க்கிறபோது, ஏதோ ஒரு பெரிய சக்தி இருக்கிறது என்று நாம் தேர்ந்து ஒரு முடிவுக்கு வந்து, தெளிவு கொள்கிறோம். அந்த சக்தியைத் தான் எல்லா மதங்களும் பரம் என்று பேசுகின்றன. பிரமம் என்று புகழ் கின்றன. பரம பிதா என்ற போற்றுகின்றன. எல்லா மதத்தினரும் இந்தக் கருத்தை ஏற்றுக் இதாள்கின்றனர். -