வள்ளுவர் வணங்கிய கடவுள் 195
2. கண்ணுக்குத் தெரிகின்ற சக்தியுடன், கலந்து போகமுடியாதது மனித சக்தி என்று நாம் கொள்கிற போது, கண்ணுக்குத் தெரியும் அந்த புனித சக்திகளால், பெருமளவு பயனடைவதைத்தான், அங்கே நாம் உண்ர முடிகிறது.
கண்ணுக்குத் தெரிந்தாலும், அவை மண்ணுக்கு வந்தாலும், அந்த புனித சக்தியினைப் போற்றிப் பயன் பெற முடிகிறதே தவிர, ஏற்று இணைந்து, தொடர்ந்து உறவாடி வாழ முடிவதில்லையே!
ஆகவே, புனித சக்தியாக விளங்கும் சூரியனைப் போற்றுகிறோம். அந்த தெய்வ சக்தியை, அதன் தொடர்பான காற்று, கனல், புனல் இவற்றையும் போற்றி ஏற்றுக் கொள்கிறோம்.
இப் படிப் பட்ட புனித சக்திகள் தாம் , மனித சக்தியை, மிகுதிப் படுத்தி வாழ உதவுகின்றன.
4. பரம சக்தி: மிக மேன்மையான சக்தி இது என்றே கூறலாம். ஆத்மா என்றும் கூறலாம். நமக்கு ஆத்மா என்பது உயிர்க்காற்று. பிராண வாயு. உடல், மனம், ஆத்மா என்று நம் உடல் பிரிந்துள்ளது.
உலக வாழ்க் கைக் கு எது உதவுகிறதோ, உழைக்கிறதோ அதற்குப்பெயர் உடல்.
உடலின் உழைப் புக்கு, இயக்கத்திற்கு, செயலூக்கத்திற்கு எது ஆணையிடுகிறதோ, ஆறுதல் ஆனந்தம் போன்ற அனைத் தையும் தருகிறதோ, அதற்கு மனம் அல்லது உள்ளம் , அல்லது மூளை என்று பெயர். - -
உற்சாகமாக உடல் உழைக்கவும், உத்வேகத்துடன்