196 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
கட்டளை இடவும் கூடிய மூளைக் கும் , எந்த சக்தியானது ஆற்றுப் படுத்துகிறதோ, அதுதான் ஆற்றுமா ஆகிறது. அதுதான் ஆத்மாவாகி விட்டது.
இந்த ஆத்ம சக்திதான் பரம சக்தியாக விளங்குகிறது. ஆத்மாவைப் பற்றிய ஆயிரம் விளக்கங்கள், கதைகள், கற்பனைகள் போன்றவை களை இங்கே நாம் எண்ணவே வேண்டாம்.
உயிர்க் காற்றானது உடலுள் பரவிக் கிடக்கிறபோது அது ஆத்மா. ஆத்மா உடல் முழுதும் குறைவற நிறைந்து கிடக் கும் போது பெறுகிற நிறைந்த சக்திதான பரம சக்தி.
பரமசக்தி தான் சும்மா கிடக்கும் மனித சக்தியைத் தெளிவாக்கி, அநித சக்தியாக வளர்த்து, புனித சக்தியாக உயர்த்தி, உலகில் மேம்பட வைக்கிறது.
பரம சக்தியை அடைபவரைத்தான் பரம்பொருள் என்ற அளவில், மக்கள் பாராட்டுகிறார்கள். போற்றிப் புகழ்கின்றார்கள். ஏற்றுத் தொழுகின்றார்கள்.
அநித சக்தி யானது, பரமசக்தி போல் உடலுக்குள் மறைந்து கிடக்காமல், புனித சக்தி போல், கரம் பற்ற இயலாதவாறு, கலந்து கிடக்காமல், விழிகளுக்கு முன்பு விருந்தாக, மொழிகளுக்கு முன்பு மருந்தாக, வாழ்க்கைக்கு முன்பு ஒளியாக வழி நடத்தும் வழியாக உடனிருந்து உலாவி, உரையாடி, ஒன்றாகி வாழ்கின்ற சக்தியைத்தான் காண்கிறோம்.
அருகில் இருந்து அளவளாவி ஆன்ற ஞானத்தைப் போதித்து; தங்களைப் போல, வாழும் மனிதர்கள் யாவரும், வளத் தோடு வாழ வேண்டும் என்று வாழ் விக்கிற மோன குருக்களைத் தான் அநித