வள்ளுவர் வணங்கிய கடவுள் 197
சக்தியளார்கள் என்றும், பரம சக்தியாளர்கள் என்றும்
இங்கே நாம் குறித்திருக்கிறோம்.
மனிதர்கள் எல்லோரும் மாபெரும் சக்தியாளர்களாகத் திகழ வேண்டும், மகிழ வேண்டும் என்ற இலட்சியத்தில்தான், தனது முதல் குறளையே, சூரியனின் பெருமை பற்றி, , தன் வணக்கத்தையும் வாழ்த் தையும் தெரிவித்துக் கொண்டார் வள்ளுவர்.
மனித குலத்தை வாழ் விக்கின்ற வகையில், வலிமையை, வழங்கி, உயிர்காக் கும் செயலில் சிறப்பாகப் பணியாற்றும் சூரியனைப் புகழ்ந்து பாடி; எங்கள் மனித குலத்திற்கு தொலை தூர குருவாக விளங்குவது போல, கூட இருந்து உயிர் வாழ்ந்து காக்கின்ற குரு மார்களையும் தொடர்ந்து வருகிற ஒன்பது குறள்களிலும் பாடி, தான் கூறப் போகும் ஒழுக்கப் பண்புகளை யெல்லாம் மலர்ச்சி பெறுகின்ற மனித இனமாக மக்கள் மாற வேண்டும் என்பதால் தான், முன் கூட்டியே, நல்ல ஒரு நல்வழியைக் காட்டி விடுகிறார்.
அநித சக்தி நிறைந்த மோன குருதான், வாழ்வுக்கு ஒளியும் , வழியும் காட் டி வாழ் விக்க முடியும் என்பதற்காகவே, சூரியனை வாழ்த்திப் பாடியதற்குப் பிறகு, மற்ற ஒன்பது குறள்களையும் பாடி இருக்கிறார்.
மனிதனுக்கு கல்வி கற்பது என்பது தலையாய கடமை. அவ்வாறு கற்றுத் தெளிகிற கல்வி அறிவின் மூலம் , தனக்கு சிறந்த வழியைக் காட்டுகின்ற ஒரு பிரிய குருவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதாக, முதலில் வழியைக் காட்டுகின்றார்.