I98 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
நல்ல குருவைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து தான், ஒருவனது வாழ்வு உயர்வு பெற முடியும். தவறாக ஒரு குருவைத் தேர்ந்தெடுத்து விடக் கூடாது என்பதால் தான், கற்றதனால் ஆய பயன், ஒரு சிறந்த ஞான குருவைத் தேடிக் கண்டுபிடித்து, தேர்ச்சி பெற வேண்டும் என்று முதலில் குறிக்கின்றார்.
நல்ல குருவைத் தேர்ந்தெடுத்த பிறகு, அவரது மாண்டியான மாண்பு மிகு ஞானத்தினை, உள்ளத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்கிறார்.
ஞானம் பெறுகிற போது, துன்பம் வராது.
இருவினையும் சேராது. நிலமிசை நீடுவாழ முடியும் என்பதனை, உறுதியாக உறுதியாக்கிக் கூறுகின்றார்.
குருவின் ஞான வழிதான் மனக் கவலைகளை மாற்றும், பொறிவாயில் ஐந்தினையும் அடக்கியுள்ள குருபோல் வாழ் வில் நிலை பெறுகிற போதுதான் மனக் கவலையை மாற்ற முடியும் என்று மன வலிமையை வளர்த்துக் கொள்ளச் சொல்கிறார்.
பிறகு, வருகிற மூன்று குறள்களிலும் , பிறவாழியை நீந்துகின்ற ஆற்றல்களுக்கு, பொறிகளின் தன்மையை வென்று, அதன் மூலம் பெறும் பேறுகளுக்கு, பிறவியில் தோன்றுகின்ற வாழ்க்கைக் கடலை எளிதாக நீந்திக் கரை சேர்வதற்கு, குருவின் திருஞானம் கைகாட்டிக் கூறுவது - மனவலிமைக்கு உதவுகின்ற உடல் வலிமையையும் வளர்த்துக் கொள் என்பதுதான்.
மனிதர்களின் கடமை, நல்ல குருவைத்
தேர்ந்தெடுப்பது, அவர் ஞானத்தைத் தொழுது ஏற்றுக் கொள்வது; போற்றி அந்த ஞான வழியில் நடப்பது;