உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 201

அதற்குரிய விளக்கம் : எழுத் தென்று சொல்லப்படுவன ஆண், பெண், அலி என மூன்று

வகைப்படும்.

அவற்றுள் ஆண் பால் எழுத்து: அகர முதல் ஒளகாரம் இறுதியாகிய உயிரெழுத்துக்கள் பனிரெண்டும் ஆண்பால் எழுத்துக்களாம்.

உயிர் பன்னிரண்டும் ஆணெனப் படுமே (பிங்கலம் 1358) என்கிறார் பிங்கலர்.

பெண்பால் எழுத்து: உயிர் மெய் எழுத்துக்கள் இரு நூற்றுப் பதினாறும் பெண் எழுததுக்கள் என்பதை பாடுகிறார். -

உயிர் மெய் எல்லாம் பெண்ணெழுத் தென்ப (பிங்கலம் 1359) -

அலி எழுத்து: மெய்யெழுத்துப் பதினெட்டும் அலி எழுத்தாகும்.

ஒற் றெழுத் தென் லாம் அலி எனப் படுமே (பிங்கலம் 1360)

எழுத்துக்கள் எல்லாம் ஆண், பெண், அலி இனம் என்று குறிக்கப்படுவது போலவே, உலகு என்ற சொல்லானது மக்களைக் குறிப்பதால், மக்களிலும் ஆண், பெண், அலி என்று மூன்று வகை மக்களைக் காட்ட வருகிறது. -

எழுத்தும் மூன்று வகை. மக்களும் மூன்று வகை.

அகரத்தால் மூன்று வகை எழுத்துக்களும் சிறப்பு பெறுகின்றன. -