இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
204 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
மனிதர்களில் தெய்வத்தைத் தேடிய திருவள்ளுவர் முயற்சி போலவே, வாசகர்களின் மனதிலே மகிழ்ச்சியைத் தேடுகிற முயற்சியாக இந்நூலை உங்கள் கரங்களில் படைக்கிறேன். -
பயன் பெறுக, புகழ் பெருக, பாரில் நீடு வாழ்க என்று வாழ்த்துகிறேன். வாழ்த்துவதில் மகிழ்கிறேன். வழிகாட்டுவதற்கு வாய்ப்பு கொடுத்த வள்ளுவரின் மாணடிகளைப் பணிந்து, வான் புகழ் வள்ளுவரின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் நல்லுலக மக்களாக நீங்கள் திகழ வேண்டும் என்று கேட்டுக் கொள்வதில் பெருமையடைகிறேன். பேரின்பம் பெறுகிறேன்.
அன்புடன்
டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா