உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

தெய்வப்புலவர் என்று எல்லோராலும் தொழுதேத்தப் பட்ட திருவள்ளுவரைப் பற்றி, ஒரு புலவன் இப்படிப் பாடியிருக்கிறான். அதாவது வள்ளுவனையே நினைந்து நினைந்து, தன்னையே இழந்து தன் பெயரையும் மறந்து போனான். அவன் பாடியதற்கு மேலாக, வள்ளுவனுக்கு வேறொரு புகழாரமும் தேவையில்லையே! பாட்டைப் படியுங்கள்.

“அவனே புலவன் அவனே கவிஞன்

அவனே தமிழை அறிவோன் - சிவனறிய வள்ளுவ தேவன் வசனத்தை மெயப் யாக உள்ளுவ தேவன் உளன் ‘’

(அபிதான சிந்தாமணி பக்கம் 850)

மறை இனங்கள், மறை யாகமங்கள், மனுநீதி மன்னர் மன்பதைகள் முதலியவற் றை, மனித குலத்திற்காகப் பாடிய வள்ளுவர், மக்களிடம் எதை எதிர்பார்த்தார்?

புகழையா? பொருளையா? பூரிக்க வைக் கும் அதிகாரத்தையா? அல்ல அல்ல.

எல்லா மனிதர்களுக்கும் ஏதேதோ வானுரையும் தெய்வத்தை மக்கள் வடிவமாக மாற் றிச் சொல்லி மண்ணுலகத்திற்கு கீழிறங்கிக் கொண்டு வந்தார்கள் பலர். வள்ளுவரோ, மனிதர்களை தெய்வத்திற்கு இணையாக துரக் கி உயர்த் தி வைத்தார். அதற்காகத்தான் மனிதர்களை தெய்வமாக் கும் மார்க்கங்களைக் வசீகரமாக்க கூறினார்.