பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 2I

2. மனிதர்கள் மத்தியிலே!

அகிலத்தில் தோன்றிய அத்தனை உயிரினங் களிலும் அழகான தோற்றம். அறிவான ஏற்றம். அறிந்து தெரிந்து செயல்படுகின்ற ஊக்கம், நோக்கம் கொண்டு சீரும் சிறப்பும் பெற்று முன்னோக்கி வாழ முயன்று வருவது மனித இனம்.

அத்தனை உயிரினங்களிலும் நீர் வாழ்வன, ஊர்வன, பறப் பன, நடப்பன போன்ற உயிரினங்களை, ஜந்துக்கள் என்றனர். ஐந்தறிவும் அதற்கு உட்பட்டும் அமைந்திருந்த காரணத்தால் அவற்றை அஃறிணை என்றனர்.

ஆறாவது அறிவான பகுத்தறிவை மனிதர்கள் பெற்றிருந்ததால், அவர்களை உயர்திணை என்றனர்.

சிரிக்கத் தெரிந்த, சிந்திக்க முடிந்த, பேசப் புரிந்த, வடிவான உடலமைப்புடன், சிறப்பான பிறப்பால்

உயர்ந்திருக்கும் மனிதர்கள், உயர்தினை தானே!

சிரிக்கத் தெரிந்ததால், பசப் பவும்; சிந்திக்க