sucirsibou succorru s-o sir 23
தமனி என்றால் தீ போன்றவன், வேலி போன்றவன்,
தனிமன் என்றால் தனியே நிலைத்து நிற்பவன்.
தன் என்றால் ஒப்பில் லாதவன், கலப் பில் லா தவன், சுத்தமானவன் என்றெல்லாம் அர்த்தங்கள் இருக்கின்றன.
இப்போது, மனிதன் என்ற சொல்லை உச்சரித்துப் பாருங்கள். அதன் மகிமை, மேன்மை, மரியாதை மகத்துவம் எல்லாம் புரியும். மேலும் சிந்தித்தாலும் விரியும். -
மனித இனம் ஒரு ஒப்பற்ற இனம், உலகை ஆள வந்த உன்னத இனம். வாழ்க்கையை சுவைக்க வந்த வலிமை மிக்க இனம். எல்லா சக்திகளையும் பெறக் கூடிய ஏற்றம் நிறைந்த இனம் என்பது இப்போது எளிதாக விளங்குகிறதல்லவா! -
இப் படிப் பட்ட மனிதர்களை எழுத வந்த அறிஞர்கள், ஆகா! ஓகோ என்று புகழ்ந்து விட்டுப் போய் விடவில்லை.
கற்களிலே பல வகை. புற்களிலே பல வகை. முட்களிலே பல வகை என்பது போல மனிதர்களையும் பல வகையாய் பிரித்துப் பார்த்தார்கள். உரித்துப் பார்த்தார்கள். -
பார்க் கும் போது பாலும் கள்ளும் ஒன்றாகத் தெரிவதுபோல; உப்பும் கற்பூரமும் ஒன்றாகத் தெரிவதுபோல; எருமையும் யானையும் ஒரு நிறமாகத் தெரிவது போல; கழுதைக் குட் டியும் குதிரைக் குட்டியாகத் தெரியவது போல, மக்களாக உருவம்