பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 25

நியாயங்கள் அநியாயங்கள் தெரிந்து, ஆரவாரத்துடன் இல்லாது அடிமைத் தனத்துடன் அன்றாட வாழ்வினை அறிவோடு நடத்திச் செல் பவர்கள்; கொஞ்சம் தெளிவானவர்கள். தேர்ந்தவர்கள் சராசரி மனிதர்கள்.

3. அறிஞர்கள் என்பவர்கள் அறிவுடையவர்கள். புலமை நிறைந்தவர்கள். மனோ வேகத்திற் கும், யூகத்திற் கும், விவேகத்திற்கும் ஈடு கொடுத்து பணியாற்றி, இன்பமடைபவர்கள். அதாவது அறியும் பண்பாற்றலில், ஆதிக்கம் செலுத்தும் அறிவாளர்கள். அதாவது, உணர்தல் , நினைத்தல், மதித்தல், அனுபவித்தல், பயிலுதல், எதையும் முடிவு காண நிச்சயித்தல் , முனைதல், தெரிதல், தெளிதல் எல்லாவற்றிலும் தேர்ந்தவர்கள்.

அறிவு என்பதற்கு ஆங்கிலத்தில் Knowledge என்று கூறுவார்கள்.

Know என்பதற்கு அறிதல் என்றும் , Ledge என்பதற்கு அடுக் குதல் என்றும் அர்த்தமாகும். படித்தும் பட்டனுபவத்தாலும் அப்படியே உணர்வுகளை அடுக்கிக் கொண்டே போகும் போது, சேர்த்துக் கொண்டே செல்லும் போது, அதில் உணர்வு செறிவு நிறைய உண்டாகிறது. அறிவாக ஒளிர்கிறது. ஆகவே, அறிவு பூர்வமாக உயர்ந்தவர்களை, அறிஞர்கள் என்று கூறுகின்றோம். அறிஞர்களை அறிவர்கள் என்றும் கூறுவார்கள்.

4. சான்றோர்கள் என்பவர்கள், கல்வி கேள்விகளில் சிறந்து, அன்பு பண்புகளில் மேலோங்கி, ஒழுக்கம் பழக்கங்களில் மேம்பட்டு, மற்றவர்களுக்கு, மனிதர் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று உதாரண புருஷராக, சாட்சியாகத் திகழும்