26 டாக்டர் எஸ். நவராஜ்-செல்லையா
சன்மார்க்க சீலராக வாழ்பவரைத் தான், சான்றோர்கள் என்கிறார்கள்.
சான்று+ஒர் என்ற இரு சொற்களும் சான்றோராக உருவாகி யிருக்கிறது. ஒர் என்றால் ஒப்பற்ற சான்று என்றால் சாட் சி; மனித இனத்தின் மகிமை மிக்க மனிதர் என்று பாராட்டப் படுகின்ற நிலை. இது, மனித வாழ்க்கையின் நான்காவது நிலை.
5. உயர்ந்தோர் என்பவர்கள், தண்ணிரில் அலை போல, தரையில் மலை போல, உயர்ந்து காணப்படு பவர்கள். கற்களில் சிலை போல, பண்பட்டவர்கள். பயன்படுபவர்கள். உயர்ந்தோர் என்பவர்கள் அந்தணர்கள், பெரியோர்கள், பார்ப்பார்கள்.
செந்தண்மையும், செய்யும் தொழில் களில் நன்மையும், சொல் லில் உண்மையும் கொண்டு, உயிர்களுக்கு உதவுகின்ற பண்பாளர்கள் அந்தணர்கள்.
தங்களை மட்டும் நினைக்காமல், இந்தத் தரணியில் வாழ்கிற மக்களைப் பற்றியும், முக்காலத் தையும் பார்க் கிறவர்கள் பார்ப் போர்கள். இது சாதியால் வந்த பெயர்கள் அல்ல. சக்தியும் சாதனை யும் படைக்கின்ற பெரியோர்களுக்கு உரிய விளக்கம்.
வாழ்கின்ற மக்களிடையே அறிஞராக இருந்து, சான்றோராகத் திகழ்ந்து, உயர்ந்தோராக வெளிப்படு கின்ற பெருமை கொண்டவர்களைத் தான், உயர்ந்தோர் என்கிறோம்.
6. அமரர்கள் என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது இறந்து போனவர்களைப் பற்றித்தான். ஒரு குடும் பத்தில் ஒருவர் இருக்கும். வரை மனிதராக வாழ்கிறார். இறந்துபோன பிறகு,