வள்ளுவர் வணங்கிய கடவுள் 29
திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு, திருவள்ளுவத் தேவர் என்பதும் , போன்ற பல குறிப்புக்கள். இந்த உண்மையை நமக்கு தெளிவாக உயர்த்துகின்றன.
தேவன் என்பதற்கு ஆசான் என்றால், கடவுள் என்றும் குரு என்றும் ஒர் அர்த்தம் உண்டு.
மனிதர்களில் தேவர் நிலை என்பது, உயிருடன் வாழுங் காலத்திலேயே, தெய்வங்கள் பெறுகின்ற பூசை, துதி, வழிபாடு, வணக்கம் இவற்றைப் பெறுகின்ற பேறு பெற்றவர்களைத் தான் தேவர் என்றனர்.
தமிழ் மன்னர்களில் சிலர், கோயில் கட்டப்பட்டு, தெய்வ நிலை பெற்றதும் உண்டு.
கோயில் என்பதற்கு அரசன் வாழ்கின்ற இடம் என்ற அர்த்தமும் உண்டு.
நம் காலத்தில் நடிகைக் கும் கோயில் கட்டுகின்றார்கள் என்பீர்கள். கோயில் என்பது சாலை யோரத்தில் உருவாக்கப் படுகிற செங்கல் கட்டிடம் அல்ல. கோயில் அமைப்பதற் கென்றே, பல கொள்கைகள், கோட்பாடுகள், நெறிகள், நிலைகள் உண்டு. ஆகவே, இன்றை சூழ்நிலையை நம் மறந்து விடுவோம். மன்னித்து விடுவோம்.
மக்களிலே மகா சக்தியும், மகா வல்லமையும் மிக்க மனிதர்களை, தேவர் என்று அழைத்தார்கள். அவர்களில் அரசன், துறவி, குரு என்று யாரும் இருக்கலாம்.
இப்படி மனிதர்களைப் பிரித்துப் பார்த்த போது,