3O டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
எனக்குள் எழுந்த எழுச்சியானது, மனிதர்களும் இந்த தேவர் நிலையை அடைய முடியுமா என்பதுதான்.
கண்ணுக் குத் தெரியாத சக்தியை, புனிதத் தன்மையை கடவுள் என்றனர். தெய்வம் என்றனர்.
கண்ணுக்குத் தெரிந்த, காட்சியில் கலந்த, அந்த அரிய சக்தியைப் பெற்ற மகாமனிதர்களுக்கும் தேவர் என்றும் , குரு என்றும் , கடவுள் என்றும் கூறி மகிழ்ந்தனர்.
தன்னம் பிக்கை உள்ள மக்கள் பலர் உயர்ந்தோர்கள். மேலோர்கள், தெய்வம் என்று ஒரு பெரிய சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்தார்கள். அதற்கு பல பெயர்களைச் சூட் டினார்கள். பல வடிவங்களைக் காட்டினார்கள். பல உட்கதைகளை ஊட்டினார்கள். மக்கள் மனதிலே பயத்தோடு கலந்த பக்தியை மூட் டினார்கள். அதன் பயனாகவே பல மதங்கள் வீறிட்டெழுந்தன. பீறிட்டு எழுந்தன.
மனிதர்களை சிறப் புற வாழச் செய்யத் தான் தெய்வ வடிவங்களை அமைத்தனர். சிறப்பாக மனிதர்களை வாழ வைக்க, அவர்கள் மேற் கொண்ட முயற்சிகள் பலப்பல. வானுறையும் தெய்வங்களை எல்லாம் மண்ணுலகில் வாழும் மனிதர்களைப் போல் கற்பனைக் கதைகளாக்கி, தெய்வத்தை, மனித வாழ்வு நிலைக்கு இணையாக கீழே இழுத்துப் போட்டனர். கதைகளாக, கற் பனை புராணங்களாக ஆக்கி வைத்தனர். *.
தெய்வப் புலவர் என்று போற்றப் பட்ட திருவள்ளுவரோ, தெய்வம் என்று எவர் பெயரையும் கூறாமல், எந்த மதத்தையும் சாராமல், தனக்கு என்ன