வள்ளுவர் வணங்கிய கடவுள் 3I
நேருமோ என்றும் பாராமல், கடவுள் வாழ்த்து என்று கூறி தன் குறளைத் தொடங்கினார்.
வள்ளுவரின் நோக்கம் , வானிலிருந்து தெய்வத்தை இறக்கி வராமல், மண்ணுலக மக்களை தெய்வ நிலைக்கு அழைத்துச் சென்று உயர்த்திட வேண்டும் என்பதுதான்.
கண்ணுக் குத் தெரியாத சக்தி. புலன்களுக்கும் எட்டாத சக்தி என்பதுதான் தெய்வத் தன்மையின் மூலம் என்பது மதங்களின் கோட்பாடு.
ஆனால் , வள்ளுவரோ கண்ணுக்கு நேரே காட்சியாக, தெய்வத்தன்மைக்கு நேரே சாட்சியாகத் தெரியும் தெய்வ மனிதர்களைப் பார்த்தார் .
நேரே பார்த்தால் தானே, நெஞ்சம் அதில் பாயும், தோயும், பதியும், பின்னால் ஒடும், சரணடையும். சகலத்தையும் பெற உறுதி கொள்ளும். தன்னையே சமர்ப்பித்துக் கொள்ளும்.
ஆகவே தான், மனித குல மாமணிகளை மனித உருவத்தில் நடமாடும் மகிமை மிக்க மேலோர்களைப் பார்த்து, அவர்களின் அடி பணிந்து, துணிந்து நட என்று, கடவுள் வாழ்த் தை, முதல் அதிகாரமாகப் பாடினார் வள்ளுவர்.
மனிதர்கள் தெய்வமாக முடியுமா? இது என்ன மனக் கோளாறு? என்று கேட்கலாம். உண்மைதான்.
நமக்கு மதத்தை உண்டாக்கியவர்களும், நமக்குத் தெய்வமாக விளங்குபவர்களும், மனித இனத்திலே பிறந்து, மனிதர்களோடு மனிதர்களாக வளர்ந்து, வாழ்ந்து முடிந்து போனவர்கள் தாம், என்பதை நாம் மறந்து விடக் கூடாது.