பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

வாசகர்கள் வருத்தப்படாது, கோபப்படாது, என் கருத் தைக் கேட்க வேண்டும் என்று முதலிலேயே கூறிவிடுகிறேன்.

தெய்வமானவர்களை, தெய்வமாக இருப்பவர் களை, நான் ஏதோ தாழ்வாகப் பேசுவதாக நினைத்து விடக் கூடாது.

இந்து மதத்தைத் தவிர, எல்லா மதங்களும் ஸ்தாபிக்கப் பட்டது என்ற உண்மை உங்களுக்குத் தெரியும். -

கிறிஸ்துவ மதம், ஏசு கிறிஸ்துவால் உண்டாக்கப் பட்டது.

புத்த மதம் புத்தரால் உருவாக்கப்பட்டது.

ஜைன மதம் மகாவீரரால் ஏற்படுத்தப்பட்டது.

சீக்கிய மதம் குருநானக் கினால் ஏற்படுத்தப் பட்டது.

இப்படி மக்களிடையே, மனிதர்களாக வாழ்ந்த வர்கள் தாம் நம்மிடையே தெய்வமாக நின்று, நிலவி, உலவி வருகின்றார்கள்.

அவர்கள் வாழ்ந்த வாழ்க் கையை நாம் படிக்கிறபோது, அவர்களிடம் அற்புதமான குணங் களும் , அதிசக்தி மிகுந்த நயங்களும் நிறைந்து இருந்தன என்பதையே, நாம் அறிகிறோம்.

அவர்கள் மனிதர்களாக வாழ்ந்த போது, என்னென்ன பண்புகள் அவர்களிடம் விளங்கினவோ, அத்தகைய பண்புகள் தாம், கடவுள் வாழ்த்து எனும் பகுதியில், விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன.