பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

பிரம் மத் தைத் தெரிந்து கொள்வதுதான், தன்னை அறிதல் என்பதாகும்.

இந்த முழு முதற் கடவுளோடு மூவர் என்பது பிரம்மா, விஷ்ணு, சிவன் என்பது யாவரும் அறிந்ததே.

கடவுளர் மூவரைப் பற்றியும், பொதுப் படக் கூறினார் என்பது பரிமேலழகர் உரை.

பரம் பொருள் ஒருவரே தான். அந்தப் பரம்பொருளே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில் களையும் நடத்த, மூன்று உருவங்களை மேற் கொண்டு, பிரம் மா, விஷ்ணு, சிவன் எனப் பெயர் கொண்டு செயல்படுகின்றார்.

பிரம்மம் என்ற பரம் பொருளுக்கு குணங்கள் எதுவும் இல்லை. ஆனால் உலகச் செயல்பாட்டுக்காக, ரஜஸ், சத்துவம் , தாமசம் என்ற மூன்று குணங்களையும், மூன்று உருவங்கள் சார்பாக ஏற்றுக் கொள்கிறார் என்பது, தொன்று தொட்டு தொடர்ந்து வரும் ஐதீகமாகும். இது சமயக் கணக்கர்களின் சாகசக் கொள்கையாகும்.

வள்ளுவர் கடவுள் வாழ்த்து என்ற தலைப்பில் பாடியிருக்கிறார். கடவுள் அமைப்பு இன்னதென்று அவ்வளவு எளிதாகச் சொல்லி விடமுடியாது. நாம் காண்பது, களிப்பது, உண்பது, உணர்வது எல்லாம், கடவுள் தன்மையனவே என்பது கடவுளுக்கான விளக்கம்.

நம் மைச் சுற்றியுள்ள எல்லாமே, கடவுள் என்பதால், இன்ன தன்மையது, இவ்வனைத்தது என்று விவரித்துச் சொல்ல முடியாது. தனிப்பட்ட ஒன்றைப்