38 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
என்றும் ரு என்றும் பிரித்துப் பொருள் கூறுவார்கள் பெரியோர்கள். கு என்ற சொல்லுக்கு இருள் என்றும்; ரு என்ற சொல்லுக்கு வெளிச்சம் என்றும் பொருள் உண்டு.
மனதில் உள்ள அறியாமை என்ற இருளை அகற்றி, ஞான ஒளி என்ற வெளிச்சத்திற்கு மனிதர் களை அழைத்து வருபவர் தான் குருவாகிறார்.
குரு என்பதை பிரித்துப் பார்க்கிறபோது, குகாரம் என்றும் ரகாரம் என்றும் வருகிறது. o
குகாரம் என்றால் சித்தியைக் கொடுப்பவன்
ரகாரம் என்றால் பாபத்தைத் தீர்ப்பவன். - a----
இதற்கு இன்னொரு விளக்கமும் தருவார்கள்.
கு என்றால் மலம். ரு என்றால் நீக்குபவர். சித்தி என்றால் ஞானம். மலம் என்றால் அறியாமை, LD (3TJT
அழுக்கு என்று பொருளாகும்.
ஆக, மனிதர்களின் மனத்தைத் துய்மையாக்கி புறத்தை சுகப்படுத்த, நெறிப்படுத்த, நீடுவாழ்வதற் காகப் பக் குவப் படுத்த, வழி காட்டும் நடமாடும் தெய்வம் தான் குரு ஆவார்.
இப்படி குரு என்று கூறிவிட்டால், அவர் மனிதர் தானே! தெய்வம் ஆகி விட முடியுமா என்ற ஒரு கேள்வி இங்கு எழுகிறது.
நமது மூதாதையர்களிடம், முதிர்ந்த அறிவு பெற்ற மக்களிடம் இருந்த ஒரு நம்பிக்கையையும், இங்கே நாம் குறிப்பிட்டாக வேண்டும்.