வள்ளுவர் வணங்கிய கடவுள் 41
இணங் கி சேருங்கள். குருவின் ஒழுக்க நெறியில் நில்லுங்கள். தனக் குவமை இல்லாத தன்மையுடன் விளங் கும் , அவரது ஆன்ற முயற்சியில் உங்களை அர்ப் பணித்துக் கொள்ளுங்கள். இவ் வாழ் வில் ஏற்படும் பிற துன்பங்களை யெல்லாம் போக்கிட, அவரை சார்ந்து கொள்ளுங்கள் என்று மக்களுக்கு வள்ளுவர் அறிவுறுத் தி செம்மையுடன் ஆற்றுப் படுத்துகின்றார். அரும்பணியைச் செய்திருக்கிறார்.
ஏன் அப்படி ஆற்றுப்படுத்த வேண்டும்?
அதுதான் வள்ளுவரின் தனிச் சிறப்பு. தெய்வப் புலவர் அல்லவா அவர் தெய்வத்தன்மை கொண்ட, தேவர் அல்லவா அவர் மக்களை தெய்வத்தன்மை கொள்ள, மேம்படுத்தவேண்டும் என்ற மேலான குறிக் கோளில் தான், இந்த மாபெரும் முயற்சியை மேற் கொள்கிறார். மானசீகமாக படிப் போரை ஆட்படுத்துகிறார். வழி நடத்துகிறார்.
இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தமில் இன்பத்து அழிவில் விடும் நெறியறிந்து எய்துதற் குரிய மாந்தர்க்கு உறுதியென, உயர்ந்தோரால் எடுக்கப் பட்ட பொருள் நான்கு. அவை, அறம், பொருள் இன்பம், வீடு என்று உரைப் பாயிரத்தில் எழுதுகிறார் பரிமேலழகர்.
நெறியறிந்து எய்துதற் குரிய மாந்தர்க்கு உறுதியானது, அற நூல்களில் விதித்தன செய்தல், விலக்கியன ஒழித்தல். ஆமாம். அவை ஒழுக்கம், வழக்கு, தண்டம் என்று மூன்று வகைப்படுகிறது.
ஒழுக்கம் என்பது ஒவ்வொருவரும் , தங்கள் வாழ்க்கையில் அறநெறிகளில் வழுவாது, முறையுடன் ஒழுகி வருவது.