42 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
வழக்கு என்பது, பொருளுக்கு ஆசைப் பட்டு, ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டு, பகையுற்று, ஒழுக்கநிலை மாறி, பொருதும் நிலைக்குப் போவது.
தண்டம் என்பது ஒழுக்கத்திலிருந்து மாறினாலும், வழக்கில் ஆளாகினாலும், உரிய தண்டனையைப்
பெறுவது.
இந்த மூவகை நிலைதான், மக்கள் வாழ்க்கை யிலே முதலாக நிற்பது. முந்திக் கொண்டு வருவது. வாழ்க் கையில் ஏற்படும் எல்லா நிலைகளுக்கும் வழிப்பாதையாக அமைந்திருப்பது.
மனிதர்களை தெய்வ நிலைக்கு உயர்த்தச் செய்யும் உன்னத லட்சியத்தில், திருக்குறளைத் தந்த திருவள்ளுவர், தாம் கூறப் போகும் , எல்லா வற்றிற்கும் , முடிவாக விளங்குவது பேறும் பேரானந்தமும் தான் என்பதை பெறச் செய்ய வேண்டும் என்கிற ஒன்றையே விரும்புகிறார்.
உண்மையை உணர்ந்து கொள்ளவும், நன்மையை
தெரிந்து செய்யவும், தீமைகளைத் தீயென ஒதுக்கவும், மக்களைத் தயார் செய் கிற, மாபெரும் பணியில் , தம்மை ஈடுபடுத் திக் கொண்டார் வள்ளுவர். அதனால் தான் அவர் செய்த குறட்பாக்கள் எல்லாம், ஒழுக்கத்தை வலியுறுத் தின. வழக்கின் கூறுகளை, விளக்கிக் காட்டின. தவறுகளை சுட்டிக் காட்டின. தவறுகளுக்குரிய தண்டனையை, நெருப்பாக சுட்டிக் காட்டின. அச்சுறுத்தின. - - -
அறத்துப் பாலிலும், பொருட் பாலிலும் உள்ள அத்தனைக் குறட் பாக்களும், மனித வாழ் வின் ஒழுக்கத்தையே வலியுறுத்தின. காமத்திலும் கட்டுப் பாடான ஒழுக்கம் வேண்டும் என்று வற்புறுத்தின.