வள்ளுவர் வணங்கிய கடவுள் 43
மனித வாழ் வில் மண்டிக் கிடக் கும் மாய் மாலங்களை, மக்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும். மனதைக் கட்டுப் பாட்டுடன் பழக்க வேண்டும். செய்கிற செயல்களில் எல்லாம் செழுமையை வளர்க்க வேண்டும் என்பது தான், வள்ளுவரின் முழு நோக்கமும், ஏக்கமுமாக இருந்திருக்கிறது.
அதற்காக, வள்ளுவர், மிகச் சுருக்கமாகச் சொன்னார். நடப்பதற்கு இதமாகச் சொன்னார். வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பது போல, வாழ்க்கை நெறிகளை திட்டவட்டமாகச் சொன்னார். தீர்மானமாகச் சொன்னார்.
மக்களாக வந்து, பிறந்து, வாழ்ந்து, தாழ்ந்து முதிர்ந்து, தளர்ந்து, முடிந்து இறந்து போவதில் , வள்ளுவருக்கு ஏற்பு இல்லை. இந்த வாழ்க்கையில் இல் லாத எப்பொருளும் இல்லை என்று மக்கள் குலத்தின் மேம்பாட்டை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பாடினார்.
தானே முழுதுணர்ந்து, தண்டமிழில் வெண் குறளால் , அறம் பொருள், இன்பம் வீடு என்னும் நான் கின் திறம் தெரிந்து, எப் பாலரும் ஏற்றுக் கொள்ளுகிற வண்ணம், மொழிந்தார் வள்ளுவர்.
இன்பம், துன்பம் என்னும் இரண்டும் மன்பதைக் கெல்லாம் எப்பொழுதும் நிகழ்வது இயல்பு தான். அதில் இன்பத்தை எப்படி ஏற்பது, துன்பத்தை எப்ப்டி தீர்ப்பது என்று இதமாக எழுதிக் காட்டினார்.
அதைக் கேட்ட சிந் தை இனித்தது, செவி இனித்தது. சொல்லும் வாய் இனித்தது. வாழ் வில் வரும் இரு வினைக் கும் மாமருந்தாக அமைந்தது