உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

என்று, வாயினிக்கப் பாடுகிறார் கவுணியனார் .

‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’

என்ற திருவுணர்வுடன் மக்களுக்கு உபதேசம் செய்கிறார் வள்ளுவர். -

ஏன் உபதேசம் என்ற வார்த் தையை, இங்கே

எழுதுகிறேன் என்றால், அவர் நமக்குத் தந்தது ஞான போதனை என்பதால் தான்.

வள்ளுவர் வடித்துத் தந்த குறள்கள் எல்லாம், எழுத வேண்டும் என்பதற்காக இயற்ற பட்டவை அல்ல. ஞான தீபமாக ஏற்றப் பட்டவை.

‘குறும் பாவால், வள்ளுவனார் ஏற்றினார்

வையத்து வாழ்வார்கள். உள்ளிருள் நீக்கும் விளக்கு”

என்று பாடுகிறார் நப்பாலத்தனார் என்னும் புலவர்.

உள்ளிருள் நீக்குபவர் தான் குரு என்று முன்னர் கூறினோம். வள்ளு வரும் குருதான். அ .ெ ரை ஆன்மீகக் குருவாக, தேவராக, தெய்வமாகவே, எல்லா அறிஞர்களும் ஏற்றுக் கொண்டிருக்கின் றார்கள். போற்றிப் புகழ்ந்து போயிருக்கின்றார்கள்.

அவர், ஆரியம் வேதம் உடைத்த தமிழ்த் திருவள்ளுவனார். ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து, அதனில் இணையாக, சீரிய செயல் ஒன்றைச் செய்த குருவாக, வழிகாட்டும் திருவாக விளங்குகிறார்

வள்ளுவர்.

அவர் கடவுள் வாழ்த்தில் பாடிய தெல்லாம் குரு பெருமையைப் புகழ்ந்து கூறவேதான்.