உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

அருள் வேண்டும் என்பதை வற்புறுத்தவும் , வலியுறுத்தவும் பாடிய, கடவுள் வாழ்த் தின் உட் பொருளையே இனி ஒவ்வொன்றாகத் தெரிந்து

கொள்வோம்.

‘தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல் தெளிவு குருஉருச் சிந்தித்தல் தானே! (183)

என்று திருமூலர் தன் திருமந்திரம் எனும் நூலில் பாடுகிறார்.

தெளிவது என்பது ஞானத் தைக் குறிக் கும். குருவின் திருமேனியைக் காண்பதும், திருநாமத்தைச் சொல்லுவதும் புறச் செயல்கள். குருவின் திருவார்த் தைகளைக் கேட்பதும், அவர் திரு உருவினைச் சிந்தித்து, செயல் களி ல் சிந் தை கொண்டிருப்பதும் அகச் செயல்களாகும்.

இவ்வாறு அகமும், புறமும் குருவே நிறைந்திருப்பதால், போற்றி ஏற்போரின் ஞானத்தில் சீலமும் , செறிவும் ; பேரறிவில் மெலும் தெளிவு பெறமுடியும்.

இவ்வாறு என் கருத்தோட்டத்தில் ததும்பி வரும் நிலையைத் தான் எனக்குள் ஏற்பட்ட எழுச்சி என்று முதலில் குறித்திருந்தேன். அதுவும், உருத்திர சன்ம கண்ணர் என்ற புலவர் எழுதிய பாடலே, எனக்குள் இந்த எழுச்சியை, விழிப்புணர்வை ஊட்டியது.