பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 47

பிணக்கிலா,

வாப் மொழி வள்ளுவர் முப்பால் மதிப் புலவோர்க்கு

ஆப் தொறும் ஊறும் உறிவு.

(திருவள்ளுவ மாலை 31)

ஆயும் தோறும் ஊறும் அறிவு என்றார். அவர் வழி, பாயும் என் அறிவினால், படைக் கும் இந்த பயன்மிகு புதுப் பொருளை, படிக்கும் வாசகர்கள் பண்புநிலை பொறுமையுடன் ஆய்வு செய்திட வேண்டி, தொடருகிறேன்.

வள்ளுவர் மதம் என்ன? குலம் என்ன? என்று ஆராய முற்படடு, எதுவும் கிடைக்காமல் அவதிப்பட்டவர்கள் அநேகம் பேர்கள்.

அவர் கூறிய வார்த்தைகள் தாம், அவரது அரிய வாழ்க் கையாக அமைந்திருக்கிறது என்று அறிகிறபோது, பெறும் ஆனந்தம் அநேகம்.

வள்ளுவர் வணக்கத்திற்குரியவர் யார் ? வள்ளுவர் மனம் கனிந்து, மனம் மகிழ்ந்து வணங்கிய கடவுள் யார் என்பதை, அவரே மிக நுண்மையாக, தனது கடவுள் வாழ்த்து அதிகாரத் தில் பாடி வைத்திருக்கிறார்.

பொருள் புரிந்து கொள்வோம். நாமும் வள்ளுவர் வணங்கிய கடவுளைக் கண்டு, வழியாய் கொண்டு, வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்து மகிழ்வோம்.