வள்ளுவர் வணங்கிய கடவுள் 49
அதற்குப் பிறகு, அவர் தருகிற விளக்கம் எல்லாம், அவரின் கருத்தாகவே தொடர்ந்து தரப்படுகிறது.
‘இந்தப் பாட்டு, தலைமை பற்றி வந்த எடுத்துக் காட் டுவமை, ஆதி பகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத் தொகை, வட நூல்
முடிவு ’’
பரிமேலழகரைப் பின்பற்றியே, பின் வந்த உரையாசிரியர்கள் எல்லோரும், உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம், ஆதியாகிய கடவுளை, முதலாகக் கொண்டுள்ளன என்றே எழுதினர்.
ஆனால் , தமிழ் நெறிப் படி, அதற்கான பொருளை, யாரும் ஆழ்ந்து ஆய் ந் திட வில்லை என்பது தான் என்னுள் எழுந்த எழுச்சியும் ஏக்கமும்.
இப்போது, அகர முதல என்ற பாடலுக்கு நான் கூற வந்த, உரையையும், கொண்டுள்ள கருத்தையும் கூறுகிறேன்.
ஆதி பகவன் முதற் றே உலகு என்பதில் தான், புதிய பொருளைக் காண்கிறேன். ஏன் இந்த உணர்வின் உந்துதல் என்பதற்குரிய குறிப் பினைக் கொடுப்பதும் என் கடமையாகிறது.
ஆதி பகவன் என்றதும் , கடவுள் பக்தி உள்ளவர்கள், தாங்கள் உரையை, கடவுள் மேல் ஏற்றிச் சொன்னார்கள். கதைக் கின்ற பேர்வழிகள், அதற் குப் பல கதைகளைக் கட் டி காற்றிலே பர்வ விட்டார்கள். -
அதிலும் புண்ணிய புருஷன், தெய்வப் புலவன்,