உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

தெய்வமாக ஆதியையும் பகவனையும், உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உரைப்பவர்களை, என்ன சொல்ல ? அவர்கள் கட்டுரை தந்த கயமைக் கதைகளால், அவர்கள் வரலாற்றிலிருந்தே, காணாமல் போய்விட்டார்கள்.

இனி, புதிய பொருள் தரும் பாடல் வரிகளைக் காண்போம்.

தென் மொழி, வடமொழி போன்ற அனைத்துக் கும் அகரமே முதலாக இருக்கிறது. அதுபோல உலகுக் கே முதலாக இருப்பது எது? அதைத்தான் உள்ளுறை பொருளாக வைத்து, உயர்ந்த வாழ்க் கைத் தத்துவமாக, விஞ்சிய ஞானம் காரணமாக, விஞ் ஞானப் பொருளை வைத்துப் பாடியிருக்கிறார் வள்ளுவர்.

ஆதி என்பது, மிகவும் பொருள் பொதிந்த சொல்லாகவே விளங்குகிறது.

ஆதி என்ற அந்த அர்த்தமுள்ள அற்புதமான சொல்லுக்கு முன்னது என்றும், முதன்மை என்றும், தலை யாயது என்றும் , மூலம் என்றும் , எப்பொருட்கும் எல்லாம் ஆனது என்றும் பல பொருட்கள் உண்டு.

ஆதம் (ஒளி) நிறைந்தது ஆதி. ஆதி என்றாலும் சூரியன் என்றே அர்த்தம்.

இந்த பொருள் நிறைந்த சொல்லைத் தான், பகவன் என்ற பதத்திற்கு, பக்க பலம் ஊட்டுவது போல, பொய்யா மொழிப் புலவர் போட்டிருக்கிறார்.

பகவன் என்ற சொல்லுக்கு, அரன், அரி, அருகன்,